பேரறிவாளனை கருணைக்கொலை செய்யுங்கள்! தாய் அற்புதம்மாள் கண்ணீர்!!

சென்னை:ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாகக் கூறியுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 7பேரை விடுவிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு பேரறிவாளனின் தாய் அற்புதம்மால் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.அதில், பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்யுங்கள்.
தினம் தினம் துடிப்பதை விட மத்திய அரசே கருணை கொலை செய்து விடலாம் என்று உருக்கமாகக் கூறினார்.இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்.
இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் இப்போது வருவது ஏன்? என்று புரியவில்லை.
எங்களையும் குடும்பத்துடன் கருணை கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம் என்று கண்கலங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here