பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை? குடியரசுத் தலைவர் நிராகரித்தார்!

டெல்லி: தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரை விடுதலை செய்ய இரண்டாவது முறையாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 20 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் கைதிகளின் விடுதலை குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் கைதிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விவரங்களைக் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். ஏழு பேரையும் விடுதலை செய்யும் நடவடிக்கையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here