ஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி!

பெங்களுர்:இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 38.4ஓவர்களில் 103ரன்கள் எடுத்து சுருண்டது.பாலோஆனில் 2வது இன்னிங்க்ஸை துவங்கிய ஆப்கான் அணி 24ரன்களில் 4விக்கெட்டுகளை இழந்திருந்தது.
365 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஃப்கானிஸ்தான் தொடர் விக்கெட் சரிவை சந்தித்தது. 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்த ஆஃப்கானிஸ்தான் மேற்கொண்டு 79 ரன்களை மட்டுமே சந்தித்தது.இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா- 4., உமேஷ்-3., இஷாந்த் ஷர்மா-2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
38.4 ஓவர்களில் 103 ரன்களை மட்டுமே ஆஃப்கானிஸ்தான் எடுத்தது.
இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியாக இப்போட்டி அமைந்தது. இதற்கு முன்னதாக 2007-ல் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 239ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here