Connect with us

Sports

28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’!

Published

on

பெங்களூர்: டெஸ்ட் போட்டிக்கு தேர்வான ஆப்கன் அணி இந்திய அணியுடன் முதல் டெஸ்ட்போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 104.5 ஓவரில் 474ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.தொடர்ந்து விளையாடிய ஆப்கன் அணி இந்தியவீரர்களின் மிரட்டலான பந்துகளை தடுத்தாட முடியாமல் திணறினர். முகம்மது ஷேசாத், ஜாவித் அஹமதி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.3ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் இசாந்த் சர்மாவின் பந்து முதல்விக்கெட்டை கைப்பற்றியது. ஆப்கன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முகம்மது ஷேசாத் 14வது ரன்னில் வெளியேறினார்.5விக்கெட்டுகளுக்குப் பின்னர் 10ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற எண்ணிக்கையில் இந்திய வீரர்களிடம் சரணடைந்தது ஆப்கன் அணி. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா தலா2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
27.5ஓவர்களில் 109ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஆப்கன் அணி. அந்த அணிக்கு பாலோ ஆன் வாய்ப்புவழங்கியுள்ளது இந்திய அணி.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator