குதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்!

பெங்களூர்: அலுவலகத்துக்கு குதிரையில் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் குறித்த செய்தி பெங்களூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.

ராஜஸ்தானை சேர்ந்தவர் ரூபேஷ்குமார்வர்மா. ஐஐடி மாணவரான இவர் கடந்த 8வருடங்கள் பெங்களூரில் வசித்துவருகிறார்.பெங்களூர் மத்திகரேயில் தங்கியுள்ள இவரது வீட்டில் இருந்து அலுவலகம் 10கி.மீ. தூரத்தில் உள்ளது. இருப்பினும் இவர் பைக்கில் அலுவலகம் செல்ல பலமணிநேரம் பிடிக்கிறது.                                                                                                              காலை 7மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால்தான் இவர் மதியம் 2மணிக்கு அலுவலகம் வரமுடிகிறது.  தினந்தோறும் பலமணி நேரங்களை டிராபிக் சிக்னல்களில் கழிக்கவேண்டியுள்ளது என்று கூறுகிறார்.தற்போது அலுவலக வேலையை உதறிவிட்டு சுயதொழில் மேற்கொள்ள திட்டமிட்டுவருகிறார். இதற்காக கடந்த வியாழக்கிழமை கடைசி நாளாக அலுவலகம் வந்தார்.   அவர் அலுவலகத்துக்கு குதிரையில் வந்தது வழியெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலர் அவரை விடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.  ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் கடைசிவேலைநாள் என்ற போர்டுடன், லேப்டாப் பையுடன் அவர் குதிரையில் கம்பீரமாக அலுவலகம் வந்தார்.அவரது சகாக்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.   எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது உண்டு பெங்களூரின் டிராபிக் பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. இதுகுறித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்க வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு வந்தேன். இவ்வாறு ரூபேஷ் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here