நடிகை திரிஷாவுக்கு சாதகமான தீர்ப்பு!

சென்னை:நடிகை திரிஷாவுக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு பட உலகில் கொடிகட்டிப்பறந்தவர் திரிஷா. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அதில் ரூ.3.52கோடி வருமானத்தை மறைத்த விபரம் தெரியவந்தது. இதற்காக திரிஷாவுக்கு வருமானவரித்துறை ரூ.1.11கோடி அபராதம் விதித்தது.இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை முறையிட்டார்.
அதில் திரிஷாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அவர் செலுத்தவேண்டிய அபராதம் ரத்தானது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை மேல்முறையீடு செய்தது.அதிலும், திரிஷாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கு வருமான வரித்துறை விதித்த அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here