திருநங்கைகளை கேலிசெய்த நடிகை! இணையத்தில் குவியும் கண்டனம்!!

சென்னை: திருநங்கைகள் மனம்புண்படும்படி நடிகை கஸ்தூரி சங்கர் தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வெளியானது.இதுதொடர்பாக விமர்சித்த கஸ்தூரி திருநங்கைகளை கேலிசெய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். Court ல் split verdict ஆமே! அப்போ …. 18ஐ பிரிச்சு ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்.. என பதிவு செய்திருந்தார்.இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பலரும் ஏன் இந்த கருத்துப்பதிவை நீக்கவில்லை என்றும் கேட்டனர். எனவே, புகைப்படத்தை நீக்கிவிட்டு பதிவை மட்டும் வைத்திருந்தார்.பின்னர் பதிவையும் நீக்கியுள்ளார். திருநங்கைகளை பெரும்பான்மையான தமிழ் சினிமா தவறாகவே காட்டியிருக்கிறது. அதே துறையில் இருக்கும் கஸ்தூரியும் அவர்கள் மனதை காயப்படுத்தும்படி நடந்துகொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here