Connect with us

Crime

ரயிலில் இருந்து தவறிவிழுந்த இளம்பெண் பலி!

Published

on

பெங்களூர்:ரயிலில் இருந்து தவறிவிழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மண்டியா மாவட்டம் மதிமிலி கிராமத்தை சேர்ந்தவர் மேக்னா(21).
இவர் சுற்றுலா செல்ல குடும்பத்தினருடன் ரயிலில் வந்தார். ரயில் ஹிரிசேவா நிலையத்தில் நின்றது.
செல்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே ரயில் வாசலில் இவர் நின்றுகொண்டிருந்தார்.
ரயில் திடீரென கிளம்பியதால் தவறி கீழே விழுந்தார்.தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator