ஸ்லீப்பர் செல்களை பயன்படுத்துவாரா தினகரன்?

சென்னை:எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகி உள்ள நிலையில் தினகரன் கையில் உள்ள கடைசி ஆயுதமாக ”ஸ்லீப்பர் செல்” உள்ளது.
தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18பேரின் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் தினகரன்.இத்தீர்ப்புக்குப்பின் எடப்பாடி அரசு எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும். அப்போது ஸ்லீப்பர் செல்களை பயன்படுத்தலாம் என்பது அவர் கணக்கு.
ஆனால், அதற்கு இடம்கொடுக்காத வகையில் நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பளித்துள்ளனர்.இதனால் பேரவையில் ஒரேஒரு எம்.எல்.ஏவாக தனித்து விடப்பட்டுள்ளார் தினகரன்.
அவர் ஏற்கனவே கூறியபடி தனது ஸ்லீப்பர்செல்களை இயக்குவதன் மூலம் எடப்பாடி அரசுக்கு கடும் நெருக்கடியை உருவாக்க முடியும்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலினை நம்பி அவர் அந்த ஆயுதத்தை எடப்பாடி மீது பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது குறித்து தினகரன் ஆச்சர்யம் தெரிவித்தார்.
கருணாநிதி ஆக்டிவாக இருந்தால் தனக்கு வெற்றி கடினமாக இருந்திருக்கும் என்றும், ஒவ்வொரு தேர்தலையும் அதற்குரிய வெற்றிக்கண்ணோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அணுகுவது வழக்கம் என்றும் தினகரன் குறிப்பிட்டிருந்தார்.
திமுகவின் தேர்தல் வியூகங்களை தினகரன் தெரிந்துவைத்துள்ள அளவுக்கு திமுகவின் தற்போதைய தலைவர்கள் தெரிந்துவைக்கின்றனரா என்பது சந்தேகமாக உள்ளது.திமுகவின் அவுட்டோர் அசம்பளி, வெளிநடப்பு போன்ற ’ஜனநாயக நடவடிக்கைகள்’ மீதும் தினகரனுக்கு தொடர்ந்து அதிருப்தி உள்ளது.
எனவே, தினகரனின் ஸ்லீப்பர்செல்கள் எப்போது வெளிவரும் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here