டுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்!

சான்பிரான்சிஸ்கோ:சமூக ஊடகத்தில் முன்னணியாக திகழும் டுவிட்டர் செய்திகளை நேரலையாகத்தரும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
செய்தி, நிகழ்ச்சி,சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடனும், நிகழும்போதே தெரிந்துகொள்வதிலும் மக்களுக்கு ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
டுவிட்டரில் நமது கணக்கில் நாம் விரும்பும் நேரலையை பார்க்கவும், நமக்கு விருப்பமான செய்திகள் தொடர்பான அறிவிப்புகளை இடம்பெறச்செய்யும் வசதியும் அறிமுகமாக உள்ளது.ஜூலையில் அமெரிக்காவில் இவ்வசதி செல்போனில் பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். ஆப்பிள், ஆண்டிராய்டுமொபைல் பயன்படுத்துவோர் இந்த வசதி கிடைக்கும்.
படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்.2015ல் மொமெண்ட் வசதியை டுவிட்டர் அறிமுகப்படுத்தியது.
2017ல் பதிவுசெய்யும் எழுத்துக்கள் எண்ணிக்கை 280ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here