சென்னை:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி தனது செல்வாக்கை தக்கவைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார்.18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வேறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தொடர்கிறார்.
இந்நிலையில், அதிமுகவிலும், ஆட்சியிலும் செல்வாக்கை நிலைநிறுத்த உள்ளாட்சி தேர்தல் பணியை நடத்த ஆர்வம் காட்டிவருகிறார்.
2016முதல் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளின் நிர்வாகத்தில் இருந்து வருகின்றன.தாழ்த்தப்பட்டோருக்கான வார்டுகள் ஒதுக்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில் மனுச்செய்யப்பட்டு 2016ல் நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தொகுதி சீரமைப்பு, வார்டு சீரமைப்பு பணிகள் தற்போது 90சதவீதம் நிறைவுபெற்றுள்ளன.
கடந்த ஜனவரியில் இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநிலம் முழுவதுமுள்ள 1,30,000வார்டுகளின் மக்கள் தொகை விபரம் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடித்து பெருவாரியான இடங்களில் வெல்லவேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அறிவிக்கப்படாத கூட்டணி அமைக்கவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுவருகிறார்.