பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகரில் அவர் அலுவலகத்தில் இருந்து இப்தார் விருந்தில் பங்கேற்க சென்றுகொண்டிருந்தார். சம்பவத்தில் இருவர் காயமுற்றனர். ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி .
பாதுகாப்பு அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் தாக்குத்தலுக்குள்ளானார்.
குண்டடிபட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இறந்துள்ளார். இருவர் காயமுற்றனர்.இச்சம்பவத்துக்கு இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், முதல்வர் மகபூபா அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவராக புகாரி கருதப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here