இந்தியா-ஆப்கன் டெஸ்ட்போட்டி! தவான் உலகசாதனை!!

பெங்களூர்: இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய வீரர் ஷிகர்தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹர்தி பாண்ட்யா 10 ரன்களுடனும் அஷ்வின் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் 2முறை பாதிக்கப்பட்டது.
இந்திய அணியில் துவக்க வீரர்கள் முரளி விஜய்- 105, ஷிகர் தவான்- 107 ரன்கள் அடித்து அசத்தினர்.
மதிய உணவு இடைவேளைக்கு முன்னரே ஷிகர்தவான் 100ரன்கள் எடுத்தார். 91பந்துகளில் அவர் இதனை சாதித்தார். 3சிக்சர், 19போர் என்று அவர் விளாசினார்.
உலகவீரர்களில் 6வது வீரராகவும், இந்தியாவின் முதல் வீரராகவும் தவான் இச்சாதனையை புரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here