கண்டம் தப்பியது…ஆனால், நித்தியகண்டம்!!

சென்னை: 18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் வேற்பட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியில் தொடர்கிறது.  இருந்தபோதும் அரசுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது.2016ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 136 இடங்களில் வென்றது. தற்போது அவையில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 114 என்று குறைந்துள்ளது.  இரட்டை இலையில் போட்டியிட்டு வென்ற 3 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகரில் வென்று அமமுக வேட்பாளராகி உள்ளார் தினகரன். 18பேர் தகுதிநீக்க வழக்கில் சிக்கியுள்ளனர். 234 எம்.எல்.ஏக்கள் உடைய சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க  118 உறுப்பினர் ஆதரவு தேவை. ஆனால் 4 எம்.எல்.ஏ.க்கள் பற்றாக்குறையுடன் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு,  நெடுஞ்சாலை துறை மீதான ஊழல்புகார், தமிழகத்தில் குறைந்துவரும் தொழில் வளம்,  அதிகரிக்கும் நிதிச்சுமை என்று கண்டம் தப்பினாலும் நித்தியகண்டம் பூரண ஆயுசாக அரசை தொடர்ந்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here