Connect with us

Tamilnadu

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு! அன்று முதல் இன்று வரை!!

Published

on

சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இருந்த நெருக்கடி நீங்கியது. 18எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. இவ்வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகள் வழங்கியுள்ளனர்.
இவ்வழக்கின் தொடக்கமும், முடிவும் குறித்த விபரத்தொகுப்பு:

2017 பிப்ரவரி 5
அதிமுக சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.2017 பிப்ரவரி 5
முதல்வராக பணியாற்றிவந்த பன்னீர்செல்வம் பதவி விலகுவதாக தெரிவித்தார்.

2017 பிப்ரவரி 5
சசிகலா முதல்வர் ஆவார் என்றும், பன்னீர்செல்வம் துணைமுதல்வர் ஆவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

2017 பிப்ரவரி 7
சசிகலா குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா அணி, பன்னீர் அணி என்று அதிமுக பிரிந்தது.2017 பிப்ரவரி 14
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2017 பிப்ரவரி 15
அதிமுக துணைப்பொதுச்செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டார்.

2017பிப்ரவரி 16
சசிகலாவின் ஒப்புதலுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

2017மார்ச் 15
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளராக தினகரன் அறிவிப்பு. எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய திட்டம்.2017 மார்ச் 16
பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு.

2017 ஏப்ரல் 10
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல்கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றம்சாட்டி தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

2017 ஏப்ரல் 25
இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக தினகரன் கைது.

2017 ஆகஸ்ட்21
முதல்வர் அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது. அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என்ற இரு அணிகள் ஏற்பட்டன.2017ஆகஸ்ட்22
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி, குடகு சென்றனர். எடப்பாடி அரசுக்கு நெருக்கடி உருவானது.

2017 செப்டம்பர் 7 எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் தந்தனர்.

2017 செப்டம்பர்12
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடியது. சசிகலா, தினகரன் கட்சியில் இருந்து நீக்கம்.2017 செப்டம்பர் 18
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு.

2017 செப்டம்பர் 20
18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு. 18 தொகுதிகளில் விசாரணை முடியும்வரை தேர்தல் நடத்த தடை.2018 ஜனவரி23
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் விசாரணை நிறைவு. தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் உத்தரவு.

2018 ஜூன் 14
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி இந்திராபானர்ஜி சபாநாயகருக்கு ஆதரவாகவும், நீதிபதி சுந்தர் சபாநாயகருக்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator