தூக்கத்தில் பிரதமர்! யஷ்வந்த்சின்ஹா கடும் தாக்கு!!

டெல்லி:ஆம் ஆத்மி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற யஷ்வந்த்சின்ஹா, பிரதமரை விமர்சித்தார்.
ரேசன்பொருட்களை வீடுதேடிச்சென்று தரும் திட்டம் டெல்லியில் துவக்கப்பட்டது.அத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு தர அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர்.
ஆளுநர் அனில்பைஜால் அதிகாரிகளுக்கு தடைவிதித்துள்ளார் என்று ஆம் ஆத்மியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ராஜ்பவன் சென்ற முதல்வர் கேஜரிவாலை சந்திக்க ஆளுநர் மறுத்துவருகிறார்.
இதனால் ராஜ்பவனில் அமைச்சர்களுடன் 2வதுநாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் கேஜரிவால்.
அவரது கட்சியினர் இன்று ஆளுநர்மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் பங்கேற்றார் பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய யஷ்வந்த்சின்ஹா.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், பிரதமராக வாஜ்பாய் இருந்தால் உடனடியாக உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டு பிரச்சனையை சிறிதுநேரத்தில் தீர்த்து வைத்திருப்பார். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் தூக்கத்தில் உள்ளனர்.டெல்லியில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பது நாட்டுக்கு நல்லது என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆம் ஆத்மி கட்சியினர் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இதற்கு தீர்வுகாணாவிட்டால் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here