தமிழ்ப்படம்2.0 போஸ்டருக்கு வரவேற்பு!!

சென்னை:தமிழ்ப்படம்2.0 சினிமாவின் புதிய போஸ்டர் இணையத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தமிழ்ப்படம் 2.0.2010ல் வெளியான தமிழ்ப்படம் சினிமாவின் இரண்டாம் பாகம் இது.
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தனது ட்விட்டரில் ஒரு மீம்ஸ் பதிந்திருந்தார்.
தமிழிசை, ஹெச்.ராஜா புகைப்படத்தைப் போட்டு அவர்கள் இருவருமே தங்களை படத்தில் கலாய்த்திருக்கிறீர்களா என ஒருவர் கேட்பது போல் ட்விட்டராட்டி ஒருவர் கேட்டிருந்தார்.
அதற்கு சசிகாந்த், தங்களது ஆர்வம் புரிகிறது. நிச்சயமாக முடிந்ததை செய்வோம் என உறுதியளித்திருந்தார்.தமிழ்ப்படம்2.0வின் முதல் போஸ்டர் மிர்ச்சி சிவா தியானம் செய்வதைப்போன்று இருந்தது.
தற்போது சர்வதேச ரேஞ்சில் கலாய்க்கும் வகையில் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபரை சுற்றிலும் உலகத்தலைவர்கள் நிற்பதுபோன்ற படம் அது.
ஜெர்மன் அதிபர் மெர்கலின் கேள்விக்கு பதில்சொல்ல திகைத்து டிரம்ப் கைகட்டி அமர்ந்திருப்பது போன்றது ஒரிஜினல் படம்.
அதேபோன்று சிவா மற்றும் நடிகர்களை வைத்துபோஸ்டர் உருவாக்கியுள்ளது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here