தாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்!

ஆக்ரா: தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது தார் ஊற்றி சாலை போடப்பட்டதில் பரிதாபமாக நாய் இறந்தது.
ஆக்ராவின் பதேபாத் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது.
பணியில் இருந்த ஊழியர்கள் சாலையில் கொதிக்கும் தாரை ஊற்றியுள்ளனர்.தார் வழிந்துசென்று சாலையோரத்தில் படுத்திருந்த நாயின் பின்னங்கால்களில் ஒட்டிக்கொண்டது.
நாய் நகர முடியாமல் வேதனையில் அலறியுள்ளது.
கட்டுமான ஊழியர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சாலையை அமைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரி, சாலைஅமைக்கும் பணியை ஒப்பந்தம் செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
நாய் சாலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடுகாட்டில் புதைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here