தொடர் தோல்வி! அமித்ஷா அர்ச்சனை!

பெங்களூர்: ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி வெற்றி பெற்றார்.
சவும்யாரெட்டி முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள். இவர் தந்தையும் பெங்களூர் பிடிஎம் லேஅவுட் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 16சுற்றுக்கள் எண்ணப்பட்டு சவும்யா ரெட்டி 54,457 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 51,568வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.ஆர்.நகர், ஜெயநகரில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

இது பாஜக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஜெயநகரை காங்கிரசிடம் தாரை வார்த்ததால் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக விளங்கிய அனந்தகுமார், சதானந்தகவுடா ஆகியோரை தொடர்புகொண்ட அமித்ஷா அவர்களை கண்டித்துள்ளார்.
பேரவையில் காங்கிரஸ் பலம் தற்போது 79ஆக அதிகரித்துள்ளது.விபத்தில் இறந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்துகவுடாவின் தொகுதியான ஜமகண்டி, முதல்வர் குமாரசாமி வென்ற ராம்நகரம் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவேண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here