Connect with us

Business

ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை!

Published

on

மும்பை:ஜியோ சிம்கார்டு பயன்படுத்துவோருக்கு தினமும் 1.5ஜிபி கூடுதலாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4ஜி சேவையில் முன்னணியில் உள்ள ஜியோ, ஏர்டெல் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை அளித்து வருகிறது.இதனால், ஏர்டெல் நிறுவனமும் தனது கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது.
ஏர்டெல் ரூ.149, ரூ.399 ப்ளான்களில் குறிப்பிட்டவாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு ஜிபி டேட்டா வழங்குகிறது.
இதனைத்தொடர்ந்து ஜியோ தற்போது தனது வாடிக்கையாளர் அனைவருக்கும் 1.5ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.ரூ.149முதல் ரூ.799வரை உள்ள அனைத்து ரிசார்ஜ்களுக்கும் இச்சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மைஜியோ ஆப் வாயிலாக ரூ.300க்கும் அதிகமான ரிசார்ஜ் கட்டணம் செலுத்தினால் ரூ.100, மைஜியோ, போன்பே வாயிலாக ரூ.300க்கும் குறைந்த ரிசார்ஜ் செய்வோருக்கு 20சதவீத பணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்புதிய சலுகை இம்மாதம் 30ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ.1.77ஆக குறைந்துள்ளது.
கடந்த 4ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் கட்டணக்குறைப்பு வெகுவாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator