நிபா வைரஸ் பாதிப்பால் மரணத்தை தொட்டு திரும்பிய பெண்!

கோழிக்கோடு:நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி குணமடைந்து வீடு திரும்பினார்.
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. வவ்வால்களால் பரவும் இத்தொற்றுக்காய்ச்சலுக்கு கேரளாவில் 18பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.நர்சிங் மாணவி அஜன்யா, கோழிக்காடு அரசு மருத்துவமனையில் பயிற்சிக்காக சேர்ந்திருந்தார். அப்போது ஒருவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறவந்தார்.
அந்நோயாளி தங்கியிருந்த வார்டில் அஜன்யா பணியாற்றினார். நிபா வைரஸ் அஜன்யாவை பாதித்தது.மே.18ம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரசுக்கான சிறப்புப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு சுயநினைவு இல்லாதநிலை ஏற்பட்டது. இதனால் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தபோதும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.மே.31ம் தேதி அவர் கண்விழித்தார். அடுத்த 3தினங்களில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது முழுமையாக குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.

நிபா வைரஸ் தடுப்புப்பணியில் சிறப்பாக ஈடுபட்டதாக கேரள உயர்நீதிமன்றம் அம்மாநில அரசை பாராட்டியுள்ளது.சுகாதார அமைச்சர், சுகாதாரச்செயலாளர், அதிகாரிகள், டாக்டர்கள் தீவிரமாக செயல்பட்டதால் காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
நிபாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் இறுதிச்சடங்கில் டாக்டர்.கோபகுமார் பங்கேற்றது முன்னுதாரண நிகழ்ச்சி. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க இது உதவியது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here