உடல்நல வீடியோ!! மோடிக்கு குமாரசாமி பதிலடி!

பெங்களூர்: எனது உடல்நலத்தை விடவும், மாநிலத்தில் நலன் குறித்தே அதிக அக்கறைகொண்டுள்ளேன் என்று பிரதமர் மோடிக்கு நறுக்கென்று பதில் அளித்துள்ளார் குமாரசாமி.கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று, தனது உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
1.49 நிமிடங்கள் காட்சிகொண்ட அந்த வீடியோவில், பிரதமர் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் உள்ளன.யோகா தவிர, உடற்பயிற்சிகள் தனக்குப் புத்துணர்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்ட மோடி, இயற்கையின் ஐந்து தத்துவங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் அடிப்படையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடப்பதாகக் கூறினார்.
அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்தியரும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைத் தனது உடலைப் பேணச் செலவழிக்க வேண்டும்.தங்களுக்கு வசதியான உடற்பயிற்சிகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இதனால் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதைக் காண முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
இந்த பிட்னஸ் சவாலை ஏற்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனை மனிகா பத்ரா மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட தைரியமான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாகப் பதிலளித்தார் குமாரசாமி. தனது உடல்நலனில் அக்கறை கொண்டதற்காக, மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
“உடல் கட்டுக்கோப்பாக இருப்பது முக்கியம் என்பதால், இதனை ஆதரிக்கிறேன். யோகா செய்வதையும், ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதையும் தினமும் மேற்கொண்டு வருகிறேன். இருந்தாலும், எனது மாநிலத்தின் பிட்னஸ் வளர்ச்சி பற்றியே அதிகம் அக்கறை கொண்டிருக்கிறேன்; அதற்கு, உங்களது ஆதரவை வேண்டுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.தினமும் 3மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்துவந்த குமாரசாமி இருதய பாதிப்பை கருத்தில் கொண்டு உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து மேற்கொள்கிறார்.
அவரது தந்தை தேவகவுடா ஒரு பயில்வான் ஆவார். 83வது வயதில் தற்போதும் உடற்பயிற்சி செய்துவருகிறார். சைவ உணவுகளையே சாப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here