தீபிகாபடுகோன் குடியிருப்பில் தீ விபத்து!

மும்பை: நடிகை தீபிகா படுகோனேயின் வீடும், அலுவலகமும் அமைந்துள்ள 34 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் உள்ள 34மாடி குடியிருப்பின் 33-வது மாடியில் நண்பகல் தீவிபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து
வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த மாடியில் இருந்து ஏறக்குறைய 90க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். இதில் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை.இந்த தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், குடியிருப்பு பகுதியில் தீவிபத்து நடக்கும் போது நடிகை தீபிகா படுகோனே அங்கு இல்லை.
தீபிகா வசிக்கும் வீடு ஒரு தளத்திலும், அலுவலகம் ஒரு தளத்திலும் தனித்தனியாக அமைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here