Connect with us

Health

ரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்!

Published

on

டெல்லி:ரத்ததானம் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது.
மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இதுதொடர்பாக பரிந்துரை செய்துள்ளது.இதனை பரிசீலித்துவரும் சுகாதார அமைச்சகம் விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடவுள்ளது.
அதன்படி, குழந்தைபெற்ற பெண், 12 மாதங்கள் வரை ரத்த தானம் செய்யக் கூடாது.
கருக்கலைப்பு செய்த ஆறு மாதங்களுக்கும்; தாய்ப்பால் கொடுப்பது மற்றும் மாதவிடாய் காலங்களிலும் பெண் ரத்த தானம் செய்யக்கூடாது.`ரத்த வங்கிகள்’ என்ற பெயரை `ரத்த மையங்கள்’ என பெயர் மாற்றப்படும்.
ரத்தமையங்கள் ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படும்.
மலேரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் குணமடைந்த மூன்று மாதங்கள் கழித்தும்;
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்த ஆறு மாதங்கள் கழித்தும்., ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்த நான்கு மாதங்கள் கழித்தும் ரத்த தானம் செய்யலாம்.சிறிய அல்லது பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள் குணமடைந்து 6 முதல் 12 மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்.
இவ்வாறு ரத்ததானம் செய்வதற்கான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவரவுள்ளன.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator