தாஜ்மஹாலுக்கு ராமர் பெயர்! பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு!!

லக்னோ: தாஜ்மஹால் பெயரை ராம் மஹால் என மாற்றலாம் என பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து மீடியாவில் அடிபடுபவர் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங்.உ.பி. மாநிலத்தின் பைரியா சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவான இவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மொகலாய மன்னர்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்கள் இந்திய மண்ணில் கட்டப்பட்டவை.
அவற்றை நாம் அழித்துவிடக் கூடாது . ஆனால் அச்சின்னங்களுக்கு அவர்களின் பெயர்கள் உள்ளன.
எனவே அந்த வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.

உதாரணமாக, தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் அல்லது கிருஷ்ணா மஹால் அல்லது சிவாஜி மஹால் என ஏதாவது ஒரு பெயருக்கு மாற்ற வேண்டும் என்றார்.
இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சுரேந்தர் சிங் சமீபத்தில் அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோ மேல்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வேலையைச் சரியாக அவர்கள் செய்கிறார்கள் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here