செல்போனால் வெடித்தது பிரச்சனை! கணவன், மனைவி தற்கொலை!!

பெங்களூர்:செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலையில் முடிந்தது.
குடகுமாவட்டத்தை சேர்ந்தவர் அனூப். பெங்களூர் பீன்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் மேலாளராக உள்ளார்.இவர் மனைவி சவும்யா. இத்தம்பதிக்கு 3வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சவும்யா செல்போனில் நீண்டநேரம் உரையாடுவதும், பொழுதுபோக்குவதும் வழக்கம்.
இதனால் கணவரை கவனிப்பதையும் புறக்கணித்தார். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு எழுந்துவந்தது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை சவும்யாவின் சகோதரரை அனூப் வீட்டுக்கு போனில் அழைத்துள்ளார்.
சவும்யா தன்னை மதிப்பதில்லை. நீண்டநேரம் செல்போனில் செலவிடுகிறார் என்று குறைகூறியுள்ளார்.சகோதரியை சமாதனப்படுத்திய ரவிச்சந்திரா மறுநாள் சவும்யா வீட்டுக்கு சென்றார்.
வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பலமாக தட்டியும் திறக்கவில்லை.
போலீசுக்கு தகவல் கொடுத்தார் ரவிச்சந்திரா. போலீசார் கதவை உடைத்து திறந்தனர்.வீட்டின் ஒரு அறையில் அனூப்பும், மற்றொரு அறையில் சவும்யாவும் பேனில் தூக்குமாட்டி இறந்துகிடந்தனர்.
அவர்களது குழந்தை ஹாலில் மயக்கமுற்று படுத்துக்கிடந்தது. இதுகுறித்து பெங்களூர் பாகல்குந்தே போலீசார் விசாரித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here