பிரபல சாமியார் சுட்டு தற்கொலை!

இந்தூர்:மத்தியப்பிரதேசத்தில் பிரபலமான சாமியார் பாயுஜி மஹராஜ் தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. மனைவி இறந்ததால் சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்தார்.மணவாழ்க்கை சீராக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.
2011ம் ஆண்டுமுதல் பிரபலமாக தொடங்கிய இவர், அரசியல்புள்ளிகளுக்கு நெருக்கமானார்.
பாஜக மட்டுமின்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர்களும் இவருக்கு சீடர்களாயினர்.
அன்னாஹசாரே போராட்டத்தை கைவிடச்செய்ததில் பாயுஜி முக்கியப்பங்குவகித்தார். நர்மதா நதியை காப்பாற்ற மத்தியப்பிரதேச அரசு புதிய கமிட்டி ஒன்றை நியமித்துள்ளது.
அதன் தலைவராக பாயுஜி நியமிக்கப்பட்டார். இப்பதவி அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவியாகும்.
இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கைத்துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.         இவர் எழுதிவைத்துள்ள டைரிக்குறிப்பில், மிகுந்த மன அழுத்தத்தால் இம்முடிவை எடுத்தேன். என் குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் என்று உள்ளது.
பாயுஜி மகராஜின் தற்கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here