சவுதி அரேபியாவில் நர்ஸ் பணிக்கு வாய்ப்பு!

சென்னை: சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணிக்கான காலியிடங்கள் உள்ளன.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
”சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி/ எம்.எஸ்சி/ பி.எச்.டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வு 16.7.2018 முதல் 31.07.2018 வரை இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும்.தேர்ந்தெடுக்கப்படும் எம்.எஸ்சி செவிலியர்களுக்கு ரூ.95,000/- முதல் அனுபவத்திற்கேற்றவாறு அதிகபட்சமாக ரூ.1,10,000/- மற்றும் பி.எஸ்சி செவிலியர்களுக்கு ரூ.84,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவுதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்திற்க்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.எனவே, தகுதியுள்ள செவிலியர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.06.2018க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here