பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ராகுல் சவால்!

டெல்லி: எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால் என் மீது போடட்டும் அவற்றை சந்திக்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.2014 மக்களவைத் தேர்தலில் தானேவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றார்.
இதையடுத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்த் ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.பிவாண்டி நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஏ.ஐ.சேக் முன்னிலையில் அவ்வழக்கில் ராகுல் ஆஜரானார்.
வழக்கு குறித்த அறிக்கையை தான் பெற்றுக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கு ஆக.10க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் கூறிய அவர், ‘என்னுடைய போராட்டம், மோதல் அனைத்தும் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிராகத்தான்.பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினை குறித்தும், நாட்டில் இளைஞர்கள் இடையே அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் பேச மறுக்கிறார்.
ஆனால், குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்காகக் கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. ஆனால், விவசாயிகளுக்குக் கடனும், கடன் தள்ளுபடியும் அளிக்க மறுக்கிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் துணிவிருந்தால், எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் என் மீது போடட்டும். அத்தனை வழக்குகளிலும் சட்டப் போராட்டம் நடத்தி, பொய் வழக்குகள் என நிரூபித்து விடுதலையாவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here