‘போர் விளையாட்டு’ இனி இல்லை!

சிங்கப்பூர்: இனி போர் விளையாட்டுக்கள் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா-வடகொரியா அதிபர்களின் வரலாற்றுச்சிறப்புமிக்க சந்திப்பு இன்று நடந்தது.இருதலைவர்களும் 4 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளும் இணைந்து அமைதியும், வளத்தையும் ஏற்படுத்த பாடுபடவேண்டும்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவேண்டும்.
வடகொரியா-தென்கொரியா இடையேயான அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை செயல்படுத்தவேண்டும்.இருநாடுகளுக்கும் இடையே நடந்த போரில் கைதானவர்கள் திருப்பி அனுப்பவேண்டும்.
வடகொரியாவில் சர்வதேச பார்வையாளர்கள் அணுஆயுத ஒழிப்பைநேரில் ஆய்வுசெய்வார்கள் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.கொரிய தீபகற்பத்தில் இனி போர்விளையாட்டுக்கள் நடக்காது. போர் தவறானதும், தீங்கானதும் ஆகுமென்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here