சிங்கப்பூருக்கு கழிவறையை கொண்டுவந்த வடகொரிய அதிபர்!

சிங்கப்பூர்: அமெரிக்க அதிபரை சந்திக்கவந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது கழிவறையையும் எடுத்துவந்துள்ளார்.வடகொரிய தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்வது 32ஆண்டுகளுக்குப்பின் இதுவே முதன்முறையாகும்.
அதிபர் கிம் ஜாங் உன் 2011ல் பதவிக்கு வந்ததில் இருந்து ஒருமுறைகூட வெளிநாடு சென்றதில்லை.
இந்நிலையில் டிரம்பை சந்திக்க அவர் சிங்கப்பூர் வந்தார்.இதற்காக 2 பிரத்யேக விமானங்கள், ஒரு சொகுசு கப்பல் ஆகியவையும் வடகொரியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தன.
ஒரு விமானத்தில் அதிபர் மற்றும் அதிகாரிகள் குழு வந்தது. அடுத்த விமானத்தில் அதிபர் கிம் பயன்படுத்தும் பொருட்கள், உணவுவகைகள், ஆகியவை இருந்தன.
அவற்றுடன் கிம் பயன்படுத்துவதற்காக கழிவறையும் எடுத்துவரப்பட்டது.
ஒருவரது கழிவுகளை பரிசோதிப்பதால் அவரது உடல்நலம் குறித்த முக்கிய தகவல்களை பெறமுடியும்.எனவே, தன்னைப்பற்றிய ரகசியங்களை பாதுகாக்கவே கிம் ஜாங் தனது கழிவறையை எடுத்துவந்திருந்தார்.
வடகொரியாவுக்குள் சுற்றுப்பயணம் செய்யும்போது கிம் இவ்வாறு கழிவறையை உடன்கொண்டு செல்வது வழக்கம்.
2005ல் அதிபரது கழிவுப்பொருட்களை சேகரித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு கிம்மின் மெய்க்காப்பாளர் தண்டனை பெற்றார்.
வரலாற்றில், ரஷ்ய தலைவர் ஸ்டாலின் இதுபோன்ற கழிவறைகள் வைத்திருந்தார் என்று தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here