வடகொரியா தலைவர் தனக்கு நிகரானவரா? அமெரிக்க அதிபரின் பதில் என்ன??

சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது.
இருவரும் 48நிமிடங்கள் உரையாடினர். 4அம்ச திட்டத்தில் கையெழுத்திட்டனர்.
இச்சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை டிரம்ப் சந்தித்தார்.அவர் கூறியதாவது: சிங்கப்பூருக்கு வரும்போது ஒரு வரலாற்றை எழுத வருகிறோம் என்று மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.
அது நிறைவேற்றப்பட்டுள்ளது. வடகொரிய தலைவருடனான சந்திப்பு எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக அமைந்தது.
நான் அறையில் அமர்ந்துள்ளேன். அவர் வருகிறார். அந்த முதல்விநாடி….எல்லோரும் முதல்விநாடி எப்படி என்றுகேட்கிறார்கள். சில நேரங்களில் அதை விவரிக்கமுடிகிறது. சிலநேரங்களில் முடிவதில்லை.வடகொரியாவிடம் சிறியளவில் அணுஆயுதங்கள் உள்ளன. அவை விரைவாக அழிக்கப்பட்டுவிடும்.
எப்போதும்போல் எனது நண்பராக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் தொடர்ந்து வருகிறார். இச்சந்திப்பு குறித்து அவரிடமும் நான் பேசினேன்.
இச்சந்திப்பு வெற்றியடைந்ததில் சீனாவுக்குத்தான் கூடுதல் மகிழ்ச்சி. அவர்கள் நாட்டுக்கு அருகேதான் அணுஆயுதங்களை வைத்துள்ள நாடாக வடகொரிய உள்ளது.
வடகொரிய அதிபருடன் நான் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளது.அதற்கு முன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு அதிகாரிகள் ஆலோசிப்பார்கள்.
மிகச்சிறந்த, திறமையான, அறிவுப்பூர்வமான தலைவராக கிம் உள்ளார். அவருடனான ஒப்பந்தம் திருப்தி தருகிறது.
இச்சந்திப்பை கிம் தனது செல்வாக்கை உயர்த்த பயன்படுத்துவார் என்பது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை. அவர் எனக்கு நிகரான தலைவரா என்பது குறித்து நான் நினைக்கவில்லை. உலகத்தின் சமாதானத்தை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் வந்தேன். வடகொரிய மக்களுக்கான புதிய வளமான சகாப்தத்தை கிம் தொடங்கியுள்ளார்.
இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்தார்.பேட்டியின் போது உற்சாகமாக காணப்பட்டார் டிரம்ப்.
கேள்விகேட்ட நியூஸ் வீக் நிருபரிடம், அடுத்த இதழின் அட்டைப்படத்தில் நான் இடம்பெறுவேனா? எனக்கேட்டு கலகலப்பூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here