மாணவியிடம் சில்மிஷம்! ஆட்டோ டிரைவருக்கு உதை!!

தாவணகெரே: கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் சேர்ந்து தாக்கினர். அந்த விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.தாவணகெரேயை சேர்ந்தவர் மஞ்சுநாத். ஆட்டோ டிரைவராக உள்ளார்.  கல்லூரிக்கு ஆட்டோவில் செல்ல இரு பெண்கள் வந்தனர்.  அவர்களை ஆட்ட்டோவில் அழைத்துச்செல்லும்போது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் மஞ்சுநாத்.இதுகுறித்து அப்பெண்கள் தங்கள் குடும்பத்தினரிடம் புகார் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினர் ஆட்டோ ஸ்டேண்டுக்கு திரண்டுவந்தனர்.     அவர்களுடன் வந்த பெண்கள் மஞ்சுநாத்தை அடையாளம் காட்டினர்.  அவர்கள் டிரைவரை தரதரவென்று சாலையில் இழுத்துவந்தனர். அவரை செருப்பால் பெண்கள் அடித்தனர்.  அவரது குடும்பத்தினரும் சரமாரியாக தாக்கினர்.ஊர்வலமாக அடித்து இழுத்துவரப்பட்ட மஞ்சுநாத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here