நேற்று நெருப்பு! இன்று நீர்!! கிம்-டிரம்ப் வரலாற்று சந்திப்பு!!

சிங்கப்பூர்: கொரிய தீபகற்ப வரலாற்றில் புதிய அத்தியாயம் வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நிகழ்ச்சியால் தொடங்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அணுஆயுத சோதனையில் முன்னேறிவந்த வடகொரியா மீது பொருளாதார தடைகளை கடுமையாக்கினார்.
அதேநேரம் சீனாவின் உதவியுடன் பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடுகளை நடத்திவந்தார். அமெரிக்கா, வடகொரியாவுடன் நேரடியாக பேசினால் நன்றாக இருக்காது.
எனவே, முதலில் தென்கொரியா, வடகொரியா அதிபர்கள் சந்திப்பு இருக்கட்டும்.
அதனைத்தொடர்ந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தான் சந்திக்கலாம் என்று டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.


அதன்படி, கடந்த ஏப்ரல் 28ல் வடகொரிய அதிபர் கிம், தென்கொரிய அதிபர் மூன் சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பு பரமதிருப்தியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து கிம்முடன் சந்திக்க ஆர்வம் காட்டினார் டிரம்ப்.
சிங்கப்பூர் உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்திக்க முடிவானது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட கிம் திடீரென்று இச்சந்திப்புக்கு பின்வாங்கினார்.

எனினும், சிங்கப்பூர், சீனா அரசுகள் அவருடன் நம்பிக்கைதரும் பேச்சு நடத்தின.
முடிவில், அதிபர் ட்ரம்ப்பும் அதிபர் கிம்மும் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று சந்தித்தனர்.
சுமார் 45நிமிடங்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதம்தடுப்பு, பொருளாதாரம், விவசாயதுறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுவது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக ‘போஸ்’ கொடுத்தனர்.
எதிர்பார்த்ததை விடவும் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது என்று தெரிவித்தார் அமெரிக்க அதிபர்.
உலக அமைதிக்காக நடந்த இந்நிகழ்ச்சிக்காக ரூ.135கோடி செலவு செய்துள்ளது சிங்கப்பூர் அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here