அமெரிக்கா…வடகொரியா….மோதல் வரலாறு…!

வாஷிங்டன்: உலகவரைபடத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேல் எதிரிகளாக கருதப்பட்ட அமெரிக்கா-வடகொரியா நாடுகள் இன்று நட்பு பாராட்டியுள்ளன.கொரிய தீபகற்பம் இனி அமைதிப்பூங்காவாக உருவாகும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரியா தீபகற்ப பகுதியில் சீனர்கள் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேறி வசிப்பிடங்கள் உருவாக்கினர். 1910ல் ஜப்பான் வசம் கொரியா வந்தது.இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் தோற்றது. அதனை தோற்கடித்த அமெரிக்கா, ரஷ்யா கொரியாவை பிடித்துக்கொண்டன.
கொரியாவின் 38வது அட்சக்கோட்டின் வடபுறம் வடகொரியா, தென்புறம் தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது. வடகொரியாவில் ரஷ்யாவின் ஆதரவுடன் ஆட்சியும், தென்கொரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கமும் தொடர்ந்தன.

1950ல் தென்கொரியாவை ஆக்கிரமித்து போரை முன்மொழிந்தது வடகொரியா.
தென்கொரியாவுக்கு உதவியாக அமெரிக்கவீரர்கள் அதிகம்கொண்ட ஐ.நா.படை சென்ற் நிலத்தை மீட்டது.
அப்போதிருந்து வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உரசல் தொடங்கியது.
தென்கொரியாவில் அணுஆயுத சோதனைக்களமாக பயன்படுத்தியது அமெரிக்கா.

இதனால் வடகொரியாவும் அணுஆயுத சோதனையில் ஆர்வம் காட்டியது.
1999ல் அமெரிக்க அதிபர் பில்க்ளிண்டன் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தார். அது தோல்வியில் முடிந்தது.
அவருக்குபின் அதிபரான புஷ் ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மோசமான நிலையை அடைந்தது.
அதிபர் ஒபாமா இருநாடுகளுக்கு இடையே சமாதானம் ஏற்படுவதை விரும்பினார்.
அதிபர் டிரம்ப் சீனா, சிங்கப்பூர் நாடுகள் உதவியுடன் வடகொரிய அதிபரை சந்தித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here