’விஸ்வரூபம்2 ’ எதிர்ப்பை எதிர்கொள்ள தயார்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விஸ்வரூபம் படம் தாமதத்துக்கு காரணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். இம்முறையும் அதேபோன்ற காரணங்கள் தொடர்ந்தன.இந்த முறையும் எதிர்ப்புகள் வந்தால், அதை எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அதனால், அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு இப்போது தயாராக இருக்கிறேன்.சினிமாவையும், அரசியலையும் பிரித்துவைத்துக்கொண்டே அணுகுகிறேன்.
‘விஸ்வரூபம்’ படத்தைத் திரையிட்டுக் காட்டும்படி வற்புறுத்தப்பட்டேன்.
இப்போது அந்த வற்புறுத்தல் இருக்காது.
‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியும் நீட்சியும் மாத்திரம் மட்டுமல்ல ‘விஸ்வரூபம் 2’.
அதன் முன்கதையும் இதில் இருக்கிறது.
ஹாலிவுட் படங்கள் அளவுக்கு பல்லாயிரம் பிரிண்டுகளுடன் உலகம் முழுவதும் இந்தப் படம் வெளிவருகிறது.
தமிழ்ப் படங்கள், உலகமெங்கும் பார்க்கப்படும் படங்களாக கூடிய விரைவில் மாறவேண்டும்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் தேஷ் ராகத்தில் தேசப்பற்று பாடலை படத்தில் தந்துள்ளார்.
அவர் ராகத்தை தேர்ந்தெடுத்த காரணம் கண்கலங்கவைத்தது. இவ்வாறு கமல்ஹாசன் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here