சமையல் அறையில் ஒரு வில்லன்!

சென்னை: சமையல் அறையில் பாத்திரங்களை அடுப்பில் ஏற்ற, இறக்க சிறிய துணிகளை பயன்படுத்துவது வழக்கம். கைப்பிடித்துணி, கரித்துணி என்று அவற்றை அழைக்கின்றனர். இத்துணிகளில் பாக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கும்.இவை உணவை விஷமாக்கும் அபாயமுடையன என்று சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இத்துணிகளை பாத்திரங்களை கழுவியதும் துடைப்பதற்கும் பலர் பயன்படுத்துகின்றனர்.இதனால் அவற்றில் உள்ள கிருமிகள் பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டு உணவை விஷமாக்கிவிடுகின்றன. அசைவம் சாப்பிடுவோரின் சமையல் அறை துணிகள் உணவை விஷமாக்குவதில் அதிகளவில் செயலாற்றும் என நிபுணர்கள்  எச்சரிக்கின்றனர்.கோலிபார்ம், எஸ்ஆர்யூஸ் போன்ற கிருமிகள் அசைவ உணவுப் பொருட்களை உட்கொள்ளும் குடும்பங்களில் கணிசமான அளவில் அதிகமாக உள்ளன. எனவே, குறிப்பிட்ட கால இடைவேளையில் கைப்பிடித்துணியை மாற்றி புதியதுணியை பயன்படுத்தவேண்டும். இதனால் உடலில் ஆரோக்கியத்தைதரவும், பசியாற்றவும் தயாரிக்கப்படும் சமச்சீர் சத்துள்ள உணவுவகைகள் விஷமாவது தடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here