அமெரிக்கா, வடகொரிய அதிபர்கள் சிங்கப்பூர் வருகை! ட்ரம்ப், கிம் முக்கிய பேச்சு வார்த்தை!!

சிங்கப்பூர்: கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் கிம் ஜாங் உன் உடகொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். அதன்பின் வடகொரியா தீவிரமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் நடக்கும் சூழ்நிலை உருவானது. ஐ.நா சபையும், அமெரிக்காவும் வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதித்தன.கடந்த ஏப்ரலில் கிம் ஜாங் உன்னும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்தனர். அதில் கிம் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க விரும்புவாக தெரிவித்தார். இதற்கு அதிபர் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்தார். நாளை சிங்கபூரில் இருநாட்டு அதிபர்களும் சந்திப்பதாக முடிவானது.கிம் ஜாங் உன் நேற்று மதியம் சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டவர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு சிங்கப்பூர் சென்றார். விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.நாளை காலை 6.30 மணிக்கு இருநாட்டு அதிபர்களும் சிங்கப்பூர் சான்டோசா தீவில் கேபெல்லா ஹோட்டலில் சந்தித்து பேசுகின்றனர். இந்த பேச்சு சந்திப்பு சிங்கப்பூரின் வரலாற்று பதிவு என கிம் தெரிவித்தார். டிரம்ப் இது மிகவும் அரிய நிகழ்வு என்று தெரிவித்தார். இருநாட்டு அதிபர்களும் சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here