சூர்யா- கார்த்தி இணையும் திரைப்படம்!

சென்னை:பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.
அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது:
இந்தப் படத்தில் கிளிசரின் போடாமல் அழுது, பலர் நடித்துள்ளனர்.படத்தின் மீது அதீத ஈர்ப்பு இருந்தால்தான் இதைப்போல் சிறப்பாக நடிக்க முடியும்.
விரைவில் நானும் கார்த்தியும் இணைந்து நடிப்போம்.
சத்யராஜ் மாமா, வாங்கிய முதல் சம்பளத்தில் குழந்தைகளாயிருந்த எனக்கும் கார்த்திக்குக்கும் இனிப்பு வாங்கித் தந்தார். இப்போது அவர் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, இப்படத்தில் 28கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றும் தனித்துவமானது.
பட்டணத்தில் வேலைசெய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்யவைக்கும் படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இருக்கும்.அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன்முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். இவ்வாறு கார்த்தி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here