ரஜினி சினிமா மீண்டும் ஒத்திவைப்பு ஏன்?

சென்னை: இயக்குநர் ஷங்கர் தனது படங்களில் பிரமாண்டம், கிராபிக்ஸ் ஆகியவற்றை நேர்த்தியாக செய்வது வழக்கம். எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2பாயிண்ட் ஜீரோ ரூ.450கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நிறைவடையும் நேரத்தில் பாகுபலி வெளியானது.கிராபிக்சில் கலக்கிய பாகுபலி போன்று தனது படம் இருக்கவேண்டுமென்று ஷங்கர் நினைத்தார். இதனால் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் மீண்டும் உருவாக்கப்பட்டன.2016 தீபாவளி, 2017தீபாவளி, 2017 கிறிஸ்துமஸ், 2018புத்தாண்டு, 2018 ஏப்ரல் என்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது ரஜினியின் மற்றொரு படமான காலா வெளியாகி உள்ளது.காலா திரைப்படம் 100நாள் கழிந்தபின்னர் 2.0வை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் நினைக்கிறார். எனவே, 2.0 திரைக்குவர ஆகஸ்ட் 15ம் தேதிவரை ஆகலாமென்று தெரிகிறது. 2.0படத்தில் எமிஜாக்சன் கதாநாயகியாகவும், அட்சய்குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here