5அடி பாம்பின் கழுத்தை நெறித்த 3அடி பாம்பு! பகீர் படங்கள்!!

ஒடிசா: ஐந்தடி நீளமுள்ள பாம்புக்கும், 3அடி நீளமுள்ள பாம்புக்கும் சுமார் ஒருமணி நேரம் சண்டை நடந்தது. அந்த விடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. ஒடிசா மாநிலம் கோரபட் மாவட்டம் சுனபெடா நகரத்தை சேர்ந்தவர் சுஜித். இவர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டுத்தோட்டத்தில் சரசரவென்று சத்தம் கேட்டது.அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது 3அடி நீளமுள்ள சிறிய பாம்பு ஒன்று ஐந்தடி நீளமுடைய எலிகளை தின்னும் பாம்பின் கழுத்தை இறுக்கிச்சுற்றியிருந்தது.
சிறிய பாம்பின் பிடியில் இருந்து கழுத்தை விடுவிக்க தரையில் அங்கும் இங்கும் உருண்டு பிரண்டது பெரிய பாம்பு.ஆனால், ட்ரிங்கெட் பாம்பு எனப்படும் சிறிய பாம்பு தனது பிடியை விடுவதாக இல்லை. சுமார் ஒரு மணிநேரம் இரு பாம்புகளும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் இரு பாம்புகளையும் பிரித்தார். அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு தனித்தனியான இடங்களில் விட்டுவந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here