Connect with us

india

வாஜ்பாயுடன் தலைவர்கள் சந்திப்பு! உடல்நலம் குறித்து விசாரித்தனர்!!

Published

on

டெல்லி:முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
மூட்டுமாற்று ஆபரேஷன் செய்துகொண்ட அவர் வீட்டில் ஓய்வுநேரத்தை செலவிட்டு வந்தார்.

இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்று பார்த்தார். வாஜ்பாயிடம் நலம் விசாரித்த அவர், வாஜ்பாய் குடும்பத்தாருடன் சுமார் 50 நிமிடங்கள் உரையாடினார்.தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் வழக்கமான சோதனைக்காக வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சிகிச்சையில் அவர் உடல்நலம் தேறிவருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator