மாவோயிஸ்ட்.. அரைமாவோயிஸ்ட்! ஹெச்.ராஜா கடும் தாக்கு!!

காரைக்குடி: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வைகோ, பாரதிராஜா, திருமுருகன்காண்டி, சீமான், அமீரை கைது செய்யவேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.60 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினம் ஒரு ஊழல் நடந்தது. ஜி.எஸ்.டி. வரியினால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துள்ளது.
சிறு, குறு தொழில்கள் நலிவுற்று மூடப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம்.
ஜி.எஸ்.டி. காரணம் இல்லை.உலகத்திலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற 3 மாதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
50 ஆண்டு கால காவிரி விவகாரத்தில் துரோகம் செய்து தி.மு.க. வும், காங்கிரசும் தான்.

வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள், வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா, இவர்களை ஆதரிக்கு அரை மாவோயிஸ்டுகள் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here