சிங்கம், மான் வீட்டில் வளர்ப்பு! சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்!!

இஸ்லாமாபாத்: ஷாகித் அப்ரிதி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர். சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் 2 புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களால் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.மான் ஒன்றிற்கு அப்ரிதி புட்டியில் பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும், தனது மகள் கைகளை உயர்த்தி நிற்க அவரது பின்புறம் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் சிங்கம் ஒன்று படுத்திருப்பது போன்ற புகைப்படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.அப்ரிதிக்கு சிலர் பாராட்டு தெரிவித்தனர். வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பதற்கு நெட்டிசன்கள் பலரும், விலங்குகள் நல ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அப்ரிதியால் காட்டில் வாழும் விலங்குகளை வீட்டில் வைத்து எவ்வாறு இயற்கையான உணவுமுறையை வழங்க முடியும்? சங்கிலியில் கட்டி வைத்துள்ள சிங்கம் மெலிந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது. இது மனிததன்மைக்கு எதிரானது என
கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here