குழந்தையை நதியில் வீசி கொலை! லெஸ்பியன் ஜோடி தற்கொலை!!

அகமதாபாத்:ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய பெண்கள் 3வயது பெண்குழந்தையை நதியில் வீசி கொன்றனர். பின்னர் தாங்களும் தற்கொலை செய்துகொண்டனர்.அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ரஜோடா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆஷா(30). பாவ்னா(28). இருவரும் படிக்கும்போதே நெருங்கிப்பழகினர்.
இருவருக்கும் இடையே ஓரினச்சேர்க்கை உறவு மலர்ந்தது.பாவ்னா குடும்பத்தினருக்கு இதுதெரியவந்தது அவரை திருமணம் செய்துகொடுத்தனர். பாவ்னாவுக்கு மேகா(3) என்ற பெண் குழந்தை உள்ளார்.
குடும்பச்சூழலால் பாவ்னா பிறந்த ஊருக்கு திரும்பினார். ஆஷா வேலைபார்க்கும் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. இருவரும் முன்புபோல நெருக்கமாகினர். இதற்கு குடும்பத்தினரிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் வெள்ளப்பெருக்கு எடுத்துவரும் சபர்மதி நதிக்கு குழந்தையுடன் இருவரும் சென்றனர். குழந்தையை முதலில் தண்ணீரில் வீசினர்.
பின்னர் துப்பட்டாவால் இருவர் உடலையும் சேர்த்துக்கட்டிக்கொண்டு நதியில் விழுந்து இறந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here