ரஜினியின் இடத்தைப் பிடித்தார் கமலஹாசன்!

சென்னை: திரைப்படத்தில் பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை கவரும் ரஜினிகாந்தின் உத்தியை கமலஹாசன் பின்பற்றியுள்ளார்.
அவரது விஸ்வரூபம்2 படத்தின் டிரைலர் இன்று வெளியானது.கமலின் மகள் ஸ்ருதிஹாசன் டுவிட்டரில் டிரைலரை வெளியிட்டார்.
படத்தில், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கமல் எழுதி, இயக்கி நடித்துள்ள இந்தப்படம் ஆகஸ்ட்10ல் வெளியாகிறது.

அரசியல் கட்சி துவங்கியபின்னர் கமல் நடிப்பில் வெளியாகும் முதல்படம் இது.
”எந்த மதத்தையும் சார்ந்திருப்பது பாவம் இல்ல.
ஆனால் தேச துரோகியாக இருப்பது தப்பு”
என்று டிரெய்லரில் அரசியல் பஞ்ச் பேசியுள்ளார்.
இப்படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here