மசூதி மேலிருந்து குதித்து தற்கொலை! மெக்காவில் பரிதாபம்!!

மெக்கா: மெக்கா மசூதி மெக்கா மசூதி தலம். இஸ்லாமியர்கள் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவுக்குப் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பதுதான்.ஜூன் 16ஆம் தேதி வரவிருக்கின்ற ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருந்து வருகின்றனர். மெக்கா மசூதியின் மூன்றாவது தளத்தில் இருந்து ஒருவர் திடீரென்று கீழே குதித்துள்ளார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உயிரிழந்தவர் 26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்தத் தகவலை அந்நாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here