காங்கிரஸ் இருக்கட்டும்! அமித்ஷா திடீர் பேச்சு!!

அம்பிகாபூர்:நாங்கள் ஒழிக்க நினைப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸ் கலாச்சாரத்தை மட்டுமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் அவரளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நான் தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் நடத்தியதாக ஊடகங்கள் கருத வேண்டாம்.நாங்கள் ஒழிக்க நினைப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸ் கலாச்சாரத்தை மட்டுமே.
காங்கிரஸ் கலாச்சாரம் என்ற ஒன்றில் இருந்துதான் நாட்டை விடுவிக்க எண்ணுகிறோம்.
ராகுல்காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.மக்கள் மன்றத்தில் அவர் எழுப்பிய பிரச்சனைகளுக்கு பதில்கூற முயன்றேன்.
ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் எதிரிகள் இல்லை. மக்கள் பணியாற்றி வந்தால் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் படைப்போம் என்று பாஜக தொடர்ந்து முழங்கிவந்தது. அதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததால் காங்கிரஸ் கலாச்சாரத்தை என்று மாற்றிக்கொண்டுள்ளது பாஜக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here