கோகோ கோலாவின் கதை! கோலி சோடாவான ராகுல்!!

டெல்லி : கோகோ கோலா நிறுவனத்தின் நிறுவனர் குறித்த காங்., தலைவர் ராகுல் பேசிய பேச்சு நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்படுகிறது.டில்லியில் ஓ.பி.சி., பிரிவினரிடையே காங்., தலைவர் ராகுல் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், கோகோ கோலா நிறுவனத்தின் நிறுவனர் குறித்து பேசினார்.
கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியவர் முதலில் எலுமிச்சை சாறு விற்றவர்.

நீரில் சர்க்கரை கலக்கிய அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது.
இதன்மூலம் கிடைத்த பணத்தில் அந்நிறுவனம் துவங்கப்பட்டது என ராகுல் தெரிவித்தார்.
கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் நிறுவியதாகும்.
எனவே, ராகுலின் இப்பேச்சு இணையத்தில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
டுவிட்டரில் ராகுல் டிரெண்டிங்கில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here