தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை!

சேலம்: சண்முகசுந்தரம் சிமெண்டு நிறுவனத்தின் சேலம் மாவட்ட டீலராக உள்ளார். சேலம் அழகாபுரத்தில் உள்ள பிருந்தாவன் ரோட்டில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வசித்து வருகிறார்.ஈரோட்டில் உள்ள உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சண்முகசுந்தரம் தனது மனைவியுடன் சென்றுள்ளார்.வீட்டை சுத்தம் செய்வதற்காக வேலைக்கார பெண் வந்துள்ளார். பூட்டியிருந்த சண்முகசுந்தரத்தின் வீட்டின் பூட்டை திறக்க முயன்றார். பூட்டை திறக்க முடியவில்லை. வேறு புதிய பூட்டால் பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இதனிடையே மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுப்புலட்சுமியும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். வீட்டின் பூட்டை உடைத்து விட்டு, வேறு ஒரு புதிய பூட்டு போடப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் பூட்டை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தனர். 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதும், மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. தகவலறிந்த சண்முகசுந்தரம் ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு வந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் 100 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரைணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here